முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது
ரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு $85 நெருங்கி, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் (அக். 3/2018) பெரும் சரிவை சந்தித்தன. இதுவரை, இந்த ஆண்டு ரூபாய் மதிப்பு 12.07 சதவீதம் குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முறையே 2.01 பில்லியன் டாலர்கள், 7.11 பில்லியன் டாலர், ஈக்விட்டி மற்றும் கடன் சந்தைகளில் (equity and debt markets) விற்பனை செய்துள்ளனர்.
வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது என்பது வரலாற்றில் இல்லாத சரிவாகும். ஈரான் கச்சா எண்ணெய் விற்க அமெரிக்கா விதித்துள்ள தடையின் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.