Facebook suspended 200 apps
Gadgets

Facebook suspended 200 apps while it conducts a thorough Privacy audit

பேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை (third-party apps) தற்காலிகமாக‌ நிறுத்தி வைத்துள்ளது. பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன‌. கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையின் போது ஃபேஸ்புக் மற்றும் Instagram தளங்களின் அனுமதி இல்லாமல். திருட்டு, பகிர்வு அல்லது ஸ்பேம் வழி பயனர்களின் தகவல்கள் (third-party apps from stealing, sharing or spamming your data without permission) அம்பலமாக்கப்பட்டது. இதன்பொருட்டு ஃபேஸ்புக்கின் தனியுரிமை நடைமுறைகள் தணிக்கை செய்யப்பட்டன‌.

இதன்போது பயனர்களின் அனுமதி இன்றியும் அவர்களின் தகவல்களை பயன்படுத்தும் அப்பிளிக்கேஷன்கள் பல‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ன‌. இதனால் சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்களை பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக தற்காலிக‌ முடக்கம் செய்துள்ளது. தவறான‌ தகவல்கள் பரிமாற்றம் உறுதி செய்யப்பட்டால் இவை தடை செய்யப்படும் என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும் பேஸ்புக் தழுவிய‌ புதிய பயன்பாடுகள் "இன்று முதல் உருவாக்கப்பட்டவை அனைத்தும் பயனர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட முடியாது" எனவும் ஃபேஸ்புக் அதன் டெவலப்பர்களின் பக்கத்தில் (developers’ page) தெரிவித்துள்ளது.