Tokyo 2020 Olympic medals made from 80,000 tons of recycled mobile phones
சுற்றுச்சூழல்

Tokyo 2020 Olympic medals made from 80,000 tons of recycled mobile phones, electronic devices

ஜப்பானின், டோக்கியோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட உள்ள பதக்கங்கள் வெளியிடப்பட்டன. வெற்றி பெறும் அனைத்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கும் கொடுக்க வேண்டிய அனைத்து பதக்கங்களையும் 100% மறு சுழற்சி முறையிலேயே தயாரித்திருக்கிறது.

மறுசுழற்சி ! சுற்றுச்சூழல் பாதுகாப்பு !!!

இந்த 78,500 டன் எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகளில் 6.21 மில்லியன் (62.1 லட்சம்) மொபைல் போன்களும் அடக்கம் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது. இதன் மூலம் இலக்ட்ரானிக் சாதனங்களை எப்படி பயனுள்ள வகையில் மறுசுழற்சிக்கு உட்படுத்தி சூழலை பாதுகாப்பது என உலகிற்கு எடுத்துரைக்க முடியும் என ஜப்பான் கருதுகின்றது.

2020 ஒலிம்பிக் ஒலிம்பிக் பதக்கங்களைச் செய்ய சுமார் 32 கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி மற்றும் 2,200 கிலோ வெண்கலம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். இந்த மறு சுழற்சிக்காக சுமார் 78,500 கிலோ கிராம் எலெக்ட்ரானிக் பொருட்களைச் (மொபைல் ஃபோங்கள், எலக்ட்ரானிக் சிறு கருவிகள் அடக்கம்) சேகரித்திருக்கிறார்களாம்.

முப்பரிமாண வளைவுகளை கொண்ட இந்த பதக்கங்களின் வெளிப்புற வளையம் மெரிங்கு (ஒருவகை தின்பண்டம் / Meringue is a type of dessert or candy) , பளபளப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதக்கங்கள் ஒவ்வொன்றிலும், கிரீக் புராணங்களில் வெற்றியின் கடவுளாக கருதப்படும், "நைக்" கடவுள் ஒரு புறமும், மறுபுறம் ஒலிம்பிக் வளையங்களுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது. 556 கிராம் எடையுடன் தங்க பதக்கமும், 550 கிராம் எடையுடன் வெள்ளி பதக்கமும், 450 கிராம் எடையுடன் வெண்கல பதக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் மறுசுழற்சி பதக்கங்கள்

2016 Olympic போட்டியை நடத்திய பிரேசில் நாடு தன் பதக்கங்களை மறு சுழற்சி முறையில் தயாரித்திருக்கிறது. ஆனால் தயாரிக்கப்பட்ட மொத்த தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களில் வெறும் 30 சதவிகித பதக்கங்களை மட்டும் தான் மறு சுழற்சி முறையில் தயாரித்தார்கள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.