பாலீஸ்டிரின் பொருட்களுக்குத் தடை விதிக்கும் நாடுகள்
Polystyrene made food packing are banned in several countries. Biodegradable polystyrene packaging takes between one to five years to completely perish in landfills. But polystyrene can be picked up from landfills and recycled within several days.
பொதுவாக ஸ்டைரோஃபோம் என அறியப்படும் பாலீஸ்டிரின் டவ் கெமிக்கல் நிறுவனத்திற்குச் (Dow Chemical Company) சொந்தமான ஒரு பிராண்ட் (Brand) பெயர் ஆகும்.
பாலீஸ்டிரின் (polystyrene), களைந்துவிடு உணவுப்பாத்திரம் (ஒருமுறை உபயோகம்), பேக்கிங் பொருட்கள், தேநீர் கோப்பைகள் (Tea Cups), கடலை பைகள் மற்றும் கடற்கரை பொம்மைகளை மற்றும் பல விஷயங்கள் செய்ய பயன்படும் பாலீஸ்டிரின் ஒரு பெட்ரோலிய அடிப்படையிலான (Petroleum-based) கலவையிலிருந்து தயாரிக்கப்படும் தயாரிப்பாகும். இலகுவாகவும் எளிதாகவும் மலிவானதாகவும் கிடைக்கப்படும் பாலீஸ்டிரின் பொருட்கள் எண்ணற்ற அளவில் பயன்படுத்தப்படுவதால் சுற்றுபுறத்தினை எளிதில் மாசுபடுத்தும். இவை எளிதில் மட்கக்கூடிய பொருளும் அல்ல (Hardly Bio-degradable). பல வருடங்கள் ஆகும்க. ஆனால் அவற்றை மறுசுழற்சி செய்வதற்கு சில நாட்களே ஆகும்.
இன்றைய உலகில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக பாலீஸ்டிரின் பொருட்கள் மாறிவிட்டன. இதனை கருத்தில் கொண்டு உலகின் பல்வேறு நகரங்களில் பாலீஸ்டிரின் தயாரிப்புகளின் விற்பனை தடை விதிக்கப்படவுள்ளது.
நாடுகள் பாலீஸ்டிரின் பொருட்களுக்குத் தடை
சான் பிரான்சிஸ்கோ நகரம் (அமெரிக்கா) ஸ்டைரோஃபோம் தயாரிப்புக்கள் மீது தடைவிதித்து அவசர சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் அனைத்து பாலீஸ்டிரின் தயாரிப்புகளுக்கும் விற்பனை தடை விதிக்கப்படும். இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோ 2020 ஆம் ஆண்டளவில் மாசற்ற நகரமாக மாற்றப்படுமென்பதற்கான நடவடிக்கையே.
லண்டனில் கிட்டத்தட்ட வருடாவருடம் 25 பில்லியன் Polystyrene கோப்பைகள் சூழலில் வீசப்படுகின்றன.
இதைபோன்று மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்திலும் பாலீஸ்டிரின் உணவு பேக்கேஜிங்களுக்குத் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கண்மூடித்தனமாக தூக்கி வீசப்படும் பாலீஸ்டிரின் பேக்கேஜிங்கள் டெங்கு காய்ச்சல் பரவ ஏதுவாயிருக்கும் Aedes கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறிவிட்டது.
பாலீஸ்டிரின் பொருட்கள் மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆதாரங்கள், பாலீஸ்டிரினில் இருக்கும் ரெசின்கள் மனித உடலில் சுகாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றன. பாலீஸ்டிரின் சிறுத் துண்டுகளாக பிரிந்து, பறவைகள் மற்றும் மீன்களைக் உணவு பொருட்களென தவறாக ஈர்த்து உட்கொள்ள வைக்கின்றன இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பெரிதளவில் எளிதாக சேதமடைந்தது உயிர்விடுகின்றன.