earth extinction
சுற்றுச்சூழல்

Earth’s sixth mass extinction likely by 2100: MIT study

கடந்த 540 மில்லியன் ஆண்டுகளில் கார்பன் சுழற்சியின் கணிசமான மாற்றங்களை குறித்த‌ ஆய்வுதனை அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் (Researchers from Massachusetts Institute of Technology (MIT) in the US) செய்து வந்தனர். இதன்படி பூமி அதன் ஆறாவது வெகுஜன அழிவு (Earth‘s sixth mass extinction) 2100 ல் அடையலாம் எனக் கூறப்படுகிறது.

பெருங்கடல்களில் கார்பன் அளவு அதிகரிக்கும்போது பூமியின் ஆறாவது பேரழிவானது (வெகுஜன அழிவு) 2100 ஆம் ஆண்டில் ஏற்படலாம் எனவும் பூமி தனது ஆறாவது பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பேராசிரியர் (Daniel Rothman, the professor at MIT) மற்றும் கணித மேதையான‌ டேனியல் எச்சரித்துள்ளார். பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களினால் 2100 ம் ஆண்டிற்குள் பூமி அழியும் என அவர் கூறியுள்ளார்

கிரெடிசஸ்-மூன்றாம் நிலை அழிவு (Cretaceous-Tertiary extinction) என அழைக்கப்படும் கடைசி நிகழ்வு, சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. பூமியிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கு வகைகளின் சிலவற்றை அது அழித்துவிட்டது. இரண்டு நிலைகளில் ஒன்று கடந்துவிட்டால், வெகுஜன அழிவு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிந்தனர்.
.

பூமியின் ஐந்து பேரழிவு நிகழ்வுகள்

கடந்த 540 மில்லியன் ஆண்டுகளில் பூமி ஐந்து பேரழிவு நிகழ்வுகளை கண்டுள்ளது . இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜுராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில் உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது (the Earth has seen five mass extinction events). இவை பல லட்சம் ஆண்டுகள் இடைவெளியில் நிகழ்ந்தவை. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டும் நிகழக்கூடும்.

கணிப்புப்படி முதலில் கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்றும் அதை தொடர்ந்து மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடரும் எனவும் கூறப்படுகிறது. 2100 ம் ஆண்டில் 310 முதல் 500 ஜிகாடன் கார்பன்கள் (310 gigatons carbon) கடலில் கலக்கும். இவைகள் கடல்வாழ் உயிரினங்களையும், தொடர்ந்து மற்ற உயிரினங்களையும் அழிக்கும்.

19 ம் நூற்றாண்டு முதல் நவீன உலகின் வளர்ச்சியால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் வாயுவின் அளவு அதிகரித்து வருவதாகவும் அதன் விளைவாக 6வது முறையாக உலகம் அழிவை சந்திக்க உள்ளது எனவும் டேனியல் எச்சரித்துள்ளார்.