Mi Air Charge Technology
Products

Mi Air Charge Technology enables users to remotely charge electronic devices without any cables or wireless charging stands.

சயோமி நிறுவனம் ஓர் புதுவித சார்ஜிங் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு "எம்ஐ ஏர் சார்ஜ் (Mi Air Charge)" என‌ பெயரிடப்பட்டுள்ளது. மி ஏர் சார்ஜ் டெக்னாலஜி (Mi Air Charge Technology) எந்தவொரு கேபிள்கள் அல்லது வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டுகள் இல்லாமல் எலக்ட்ரானிக் சாதனங்களை தொலைவிலிருந்து சார்ஜ் செய்ய உதவுகிறது.

முதற்கட்டமாக Mi Air Charge தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட்வாட்ச், இதர அணியக்கூடிய சாதனங்கள், ஸ்பீக்கர்கள், சிறிய வீட்டு சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு சார்ஜ் செய்வதற்கு இந்த தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Xiaomi தயாரிப்புகள் உலகெங்கிலும் 90 க்கும் மேற்பட்ட சந்தைகளில் உள்ளன. ஆகஸ்ட் 2020 இல், நிறுவனம் இரண்டாவது முறையாக பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 422 வது இடத்தைப் பிடித்தது. இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட‌ இணைய நிறுவனங்களில், சயோமி 7 வது இடத்தைப் பிடித்தது.

Mi Air Charge தொழில்நுட்பம் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களை கேபிள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டு இன்றி சார்ஜ் செய்ய முடியும். இப்புதிய சார்ஜ் தொழில்நுட்பம் எந்த சாதனத்தையும் 5W திறன் கொண்டு சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது. இது இரண்டு மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் சாதனங்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.