Fujifilm’s first surveillance camera
Gears

Fujifilm’s first surveillance camera can read a Vehicle license plate from 1km away

புஜிஃபில்ம் SX800 உடன் கண்காணிப்பு கேமராக்களின் (Fujifilm’s surveillance camera) உற்பத்தியில் இறங்குகிறது, இது 40x ஆப்டிகல் ஜூம் கொண்ட நீண்ட தூர கண்காணிப்பு கேமராவாகும். சர்வதேச எல்லைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

புஜிஃபில்ம் எஸ்எக்ஸ் 800 விற்பனை!!!

புஜிஃபில்ம் எஸ்எக்ஸ் 800 (Fujifilm SX800) ஜூலை 26 ஆம் தேதி முதல் வாங்குவதற்கு கிடைக்கும். விலை விபரம் இன்னும் வெளியிடப்பட‌வில்லை.

இந்த‌ கேமராவான‌து (Fujifilm SX800) 35 மிமீ-க்கு சமமான குவிய நீளத்துடன் 20 மிமீ முதல் 800 மிமீ வரை உள்ளமைக்கப்பட்ட லென்ஸையும், டிஜிட்டல் ஜூம் 1.25x ஐயும் பெற்றுள்ளது. இவ்விரண்டும் ஒருங்கிணைந்து, புஜிஃபில்ம் SX800 க்கு மொத்தம் 1000 மிமீ குவிய நீளத்தை (focal length) அளிக்கிறது. இது ஒரு காரின் உரிமத் தகட்டினை (car’s license plate) 1 கிமீ அல்லது சுமார் 0.6 மைல் தொலைவில் இருந்து தெளிவாகப் பார்பதற்குப் போதுமானது.

சர்வதேச எல்லைகள், வனப்பகுதிகள், மற்றும் பொது இடங்களான‌ விமான நிலையங்கள், துறைமுகங்கள் அல்லது நெடுஞ்சாலைகள் ஆகிய‌ தலங்களில், SX800 இன் ஜூம் திறன்களைக் கொண்ட கேமரா பயனுள்ளதாக இருக்கும் என‌ புஜிஃபில்ம் பரிந்துரைக்கிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.