Adobe to acquire ecommerce CMS Magento in the third quarter of 2018
Gadgets

Adobe to acquire ecommerce CMS Magento in the third quarter of 2018.

அடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபலமின்வணிக சிஎம்எஸ் ஆன மெஜன்ரோவை (Magento) ஐ வாங்க ஒப்புக்கொண்டுள்ளது (Adobe to acquire Magento, a popular ecommerce CMS.). இந்த ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முடிவடையும்.

நீண்ட காலமாக , Magento இகாமர்ஸ் மேடையானது ஆன்லைன் கடைகள் (ஸ்டோர்கள்) உருவாக்க மற்றும் நிர்வகிக்க விரும்பும் நிறுவனங்களிடையே (build and manage online stores) திடமான தேர்வாக முன்னணியில் இருந்து வருகிறது.

அடோப், Magento இனை அதற்குச் சொந்தமான டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை தொகுப்பான எக்ஸ்பீரியென்ஸ் கிளவுட் (Experience Cloud,a suite of digital marketing) உடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. எக்ஸ்பீரியென்ஸ் கிளவுடானது விளம்பரம் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகளை (Adobe advertising and analytics tools.) உள்ளடக்கியது.

Magento தற்போது இரண்டு பதிப்புகளாக கிடைக்கின்றது: டெவலப்பர்களுக்கென்று தனிப்பயனாக்க மற்றும் கட்டமைக்க ஏதுவான திறந்த மூல பதிப்பு (Magento - open source version). ம்ற்றொன்று பணம் செலுத்தி பெறப்படும் பதிப்பு (paid Commerce version) - கூடுதல் செயல்பாடு கொண்ட வர்த்தக பதிப்பு. அடோப் டெவலப்பர்கள் மற்றும் வணிகர்களுக்கு மெஜன்ரோ கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்வதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது என பல்வேறு இணையதளச் செய்திகள் கூறுகின்றன.

ஒப்பந்தம் முடிக்கும் நேரத்தில் இதர விவரங்களை பகிர்ந்து கொள்வதாக அடோப் நிறுவனம் தெரிவிக்கிறது