Technology

Furishiki Shoes :Sizeless, lightweight, lace-free shoes may be the future of footwear

Furishiki Shoes :Sizeless, lightweight, lace-free shoes may be the future of footwear.Latest and greatest innovation in alternative footwear from Furoshiki. The concept for this type of footwear was derived from the Japanese custom of packaging items by wrapping them in cloth fabric. Furoshiki shoe has the only sole on the market that wraps around the entire foot. Unisex Sizings are available in Furoshiki product which fits each foot differently. The tightness of the wrapping technology is a matter of personal preference.

ஒரு ஜப்பானிய‌ வடிவமைப்பாளர் மற்றும் இத்தாலிய செருப்பு தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து எதிர்கால காலணிகளை உருவாக்கியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் பாதணிகள் கணிசமான‌ மாற்றங்கள் கண்டாலும், அமைப்பில் எந்த அடிப்படை வேறுபாடும் இல்லாததது போல இருக்கிறது. நிச்சயமாக, சிறந்த தொழில்நுட்பங்கள் அதிக நெகிழ்வு மற்றும் குவிந்த‌ காலணிகளைத் தந்திருக்கின்றது. காற்றுபுகும் காலணி மற்றும் பல‌ குளிர்ச்சியான‌ வசதிகளும் கிடைத்தது, ஆனால் இன்னும் அதே அடிப்படை வடிவமைப்பு, அதுதான் விஷயம்.

மசாயா ஹாசிமோட்டோ (Masaya Hashimoto ) மற்றும் வைபிரம் (Vibram) இதனை மாற்ற வேண்டும் என்ற‌ எண்ணத்தில் உருவான‌துதான் இந்த‌ புதுவகை காலணி. ஹாசிமோட்டோ , ஃபுரோசிகியின் (Furoshiki) ஜப்பானீய‌ பாரம்பரிய நுட்பத்தினை இக்காலணி தயாரிப்புக்காக‌ (ஈர்க்கப்பட்டு) எடுத்துக்கொண்டது.

ஃபுரோசிகி (Furoshiki) பெட்டிகள் அல்லது மலர்கள் பொதிந்து கொள்ள (Packing) பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய ஜப்பனீய‌ துணி உறையிடும் நுட்பமாகும். ஆனால் அதுவே ஆடையாகவும் பயன்படுத்த முடியும். இப்போது, இந்த புதிய கூட்டு ஒன்று சேர்ந்து, காலணிகளை தயார்செய்ய‌ உள்ளது.

FUROSHIKI-shoes

இவ்வகைக் காலணிகள் , ஒரு எளிமையான‌ கொக்கி மற்றும் கண்ணி அமைப்பின் மூலம் கால்களைச் சுற்றி, அடியில் சோல்களால் (Shoe sole) உள்ளங்கால்கள் அமரும்படி , எந்த பின்னல்களும் (laces) இல்லாமல் அணிந்து கொள்ள‌ முடியும்.

வாங்கிக்கொள்ள‌ ஆசைதான் ஆனால், விலைதான் அதிகம். புதிய‌ தொழில் நுட்பம் மற்றும் சிறிய‌ அளவிலான‌ உற்பத்தியால் இதன் விலை, ஒரு ஜோடிக்கு, சுமார் $ 110 வரை உள்ளது.