உலகிலேயே விசித்திரமான‌ புத்தகம் : கோடெக்ஸ் செராஃபினியானஸ்

The weirdest book that cannot be read ; Codex Seraphinianus


1981ல் இத்தாலிய கலைஞர், கட்டிட மற்றும் தொழில்துறை வடிவமைப்பாளர் லூய்கி செராஃபினியால் (Luigi Serafini) வெளியிடப்பட்ட‌ கோடெக்ஸ் செராஃபினியானஸ் (Codex Seraphinianus).புத்தகமே உலக‌ வரலாற்றில் விசித்திரமான‌ புத்தகம் என பரவலாக‌ அறியப்படும் கருத்து. வித்தியாசமான மாயத்தோற்றங்கள், விளக்கப்படங்களால் நிரப்பப்பட்டு, வாசித்து விளங்கிக்கொள்ளக் முடியாத‌ மொழியில் எழுதப்பட்ட புத்தகம்.

புத்தகம் முழுவதும் அனைத்து வகையான விளக்கப்படங்களுடன் சில‌ விஞ்ஞானிகள் வேற்று கிரக மனிதர்களை பற்றி இயற்கையாக‌ படிப்பதைப் போல‌ சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த மாயத்தோற்ற கலைக்களஞ்சியம் கலர் பென்சில்களால் கையால் வரையப்பட்ட அருமையான தாவரங்கள், விலங்கினங்கள், உடற்கூறியல், நாகரிகங்களை, மற்றும் உணவு வகைகளைக் காண முடியும்.

மிகையதார்த்தக் காட்சிகள் பழததிலிருந்து இரத்தம் கசிவது; ஒரு செடி நாற்காலியாக‌ உருமாறுவதைப்போலவும், காதல் ஜோடி சேர்ந்திருக்கும் போது முதலையாக‌ மார்றம் கொள்வது போன்ற‌ யதார்த்தமான‌ சித்திரங்களைப் பார்க்க‌ முடியும். புத்தகத்தின் பெயரில் உள்ள‌ “Codex (கோடக்ஸ்)” (from Latin “caudex”) எனும் சொல்லுக்கு இத்தலிய‌ மொழியில் புத்தகம் என்று பொருள். “Seraphinianus" எனும் சொல் புத்தக‌ ஆசிரியரான‌ செராஃபினியின் ( Serafini) கடைப்பெயரைக் குறிக்கும். உண்மையில் கோடெக்ஸ் செராஃபினியானஸ் (Codex Seraphinianus) என்பதன் பொருள் "செராஃபினியின் புத்தகம்" என்று பொருள்படும்.

"செராஃபினியின் புத்தகம்" என்ற‌ புத்தகத் தலைப்பினை போலவே இந்த‌ புத்தகம் அமேசான் இணையதளத்தில் $500 டாலருக்கு விற்கப்படுகிறது.

விசித்திரமான விஷயம் என்னவென்றால் 360 பக்கங்களை கொண்ட புத்தகம் முழுவதிலும் புரிந்துகொள்ளமுடியாத சிதறிக்கிடக்கும் எழுத்துக்களை கொண்டுள்ளதால் புகழ்பெற்ற மொழியியலாளர்களுக்குக் கூட தலைவலியாக‌ உள்ளதுதான். புத்தகத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் முற்றிலும் போலியாகவோ அல்லது அர்த்தமற்றதாகவோ இருக்கலாம். 2009 ஆம் ஆண்டு மே மாதம்11 ம் திய‌தி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக Society of Bibliophilesல் நடைபெற்ற ஒரு உரையாடலில் , செராஃபினி (Serafini) கோடக்ஸ் புத்தக‌ எழுத்துக்கள் (ஸ்கிரிப்ட்), பின்னால் எந்த பொருளும் மறைக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். அவரது சொந்த அனுபவத்தில் எழுத்துகளை நெருக்கமாக எழுதியது தானியங்கி எழுதுவதைப் போன்றிருந்தது; என்று அவரது எழுத்துக்களை வெளிப்படுத்த விரும்பினார். வாசகர்களுக்கு இப்புத்தகத்தில் என்ன‌ சொல்ல‌ விரும்பினாரென்றால், குழந்தைகள் இந்த‌ புத்தகத்தினை படிக்கும்போது அதிலிருக்கும் எழுத்துக்கள் அவர்களால் புரிந்துகொள்ள‌ முடியாதென்றும் பெரியவர்களால் புரிந்து கொள்ள முடியம் என்ற‌ மன நிலையினை (எண்ணத்தினை) அவர்களிடத்தில் உருவாக்குவதேயாகும்.

கோடெக்ஸ் செராஃபினியானஸ் (Codex Seraphinianus) புத்தகத்தினை எழுதி முடிக்க‌ செராஃபினிக்கு 30 மாதங்கள் தேவைப்பட்டன‌. இப்புத்தகம் 11 அத்தியாயங்கள், மற்றும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் இயற்கை பற்றியும், பின்னர் மக்களைப் பற்றியும் இப்புத்தகத்தில் பார்க்க‌ முடியும்.

இங்கே புத்தகத்தில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்ட‌ சில பக்கங்களைக் கீழே பார்க்கலாம்.

நாள் : 22.12.2015 திருத்தம் : 18.04.2016

புதியவை / Recent Articles