வெளியிட்ட தேதி : 24.03.2021
Mural Painted More Than 2,500 Years Ago Depicts Salt as an Ancient Maya Commodity
சுற்றுச்சூழல்

Mural Painted More Than 2,500 Years Ago Depicts Salt as an Ancient Maya Commodity at a Marketplace

மெக்ஸிகோவின் யுகடன் தீபகற்பத்தில் ( Mexico’s Yucatan Peninsula) உள்ள காலக்முலின் பண்டைய மாயா தளத்தில் (Maya site of Calakmul), ஒரு விற்பனையாளருக்கும் வாங்குபவருக்கும் இடையில் நிகழும் உப்பு பரிமாற்றத்தினை சித்தரிக்கும் 2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியத்தை (Mural) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உப்பு ஒரு பண்டமாற்று பொருளாக உபயோகம் செய்யப்பட்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு பழமையான‌ சான்று ஆகும்.

பண்டைய உலக நாடுகள் முழுவதும், எப்போதும், உப்பு ஒரு முக்கிய வளமாக இருந்து வந்திருக்கிறது. கிமு 6050 வரை, சீனாவிலிருந்து எகிப்து வரை எண்ணற்ற நாகரிகங்களிலும் உப்பு ஒரு முக்கிய பங்கைக் வகித்துள்ளது. இது பல்வேறு நேரங்களிலும் இடங்களிலும் நாணயமாகவும் பரிமாற்றப்பட்டு செயலாற்றியது. மேலும் உப்பிற்காக‌ கசப்பான போர்களும் காரணமாகின‌.

உப்பு அதன் நடைமுறை உபயோகங்களுக்கு மேலதிகமாக, பல கலாச்சாரங்களில் மத சடங்குகளில் ஒரு முக்கிய பங்கைக் பெற்றிருந்தது, 'உப்பு' தூய்மையைக் குறிக்கிறது. இது அனைத்து உணவுப் பொருட்களிலும் மிகவும் பயனுள்ள மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, அதனால்தான் உப்பு - “வெள்ளை தங்கம் (white gold)” என்றும் குறிப்பிடப்படுகிறது - பொருளாதார ரீதியாக எப்போதும் முதன்மையான‌ முக்கியத்துவத்தைக் கொண்டிருந்திருக்கிறது.

நாம் இப்போது உப்பை ஒரு மலிவான உணவுப் பொருளாகக் காண்கிறோம் என்றாலும், அதன் வளமான வரலாறு நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அறிந்ததைவிட பல வழிகளில் தொடுகிறது. உதாரணமாக, "salary" என்ற சொல் லத்தீன் வார்த்தையான "sal" என்ற வார்த்தையிலிருந்து உருவானது. ஏனென்றால், பண்டைய காலங்களில், உப்பு மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது, ரோமானிய இராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு சில நேரங்களில் நாணயத்திற்கு பதிலாக உப்பு வழங்கப்பட்டது. இந்த மாதாந்திர கொடுப்பனவு “salarium” என்று அழைக்கப்பட்டது. இப்போது புரிகிறதா "salary (சம்பளம்)" என்ற‌ வார்த்தை ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று !!!.

2004 ஆம் ஆண்டு முதல், பண்டைய மாயா உப்பு வர்த்தக நெட்வொர்க்குகள் தொடர்பான தொல்பொருள் சான்றுகளை மெக்கிலோப் (Mckillop) கண்டுபிடித்தார். பெலிஸில் உள்ள சதுப்புநில காடுகளின் (mangrove forests in Belize) உப்பு நீர் தடாகங்களில் மூழ்கின‌ நிலையில் பாதுகாக்கப்பட்ட கம்பம் மற்றும் தட்சால் செய்யப்பட்ட கட்டிடங்கள் ‘உப்பு சமையலறைகளின்’ மிச்சங்கள் இதில் அடங்கும்.

மாயாக்கள் இந்த இடங்களைப் பயன்படுத்தி தொட்டிகளில் உப்பு வேகவைத்து தீவைத்து உப்பு எடுப்பார். இதுவரை, ஆராய்ச்சியாளர்கள் 70 தளங்களை வரைபடமாக்கியுள்ளனர். நீரில் மூழ்கிய 4,042 கலை நயமிக்க‌ மரத்தூண்கள், ஒரு கேனோ, உயர்தர ஜேடைட் கருவி, மீன் மற்றும் இறைச்சியை உப்பு செய்ய பயன்படுத்தப்படும் கல் கருவிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மட்பாண்ட துண்டுகள் ஆகியவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளதால் இது ஒரு தொழில்துறை அளவிலான நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும் என‌ கருதபடுகிறது.

சமீபத்தில் விவரிக்கப்பட்ட இந்த சுவரோவியச் சான்றுடன் (mural evidence), கடற்கரை மற்றும் தெற்கு பெலிஸில் உள்ள ஆறுகளில் உப்பு கேக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக இந்த சான்றுகள் தெரிவிக்கின்றன என‌ ஆராய்ச்சியாளர்கள் Journal of Anthropological Archaeology இதழில் எழுதியுள்ளனர்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.