வயிற்று புண் (peptic ulcer) என்றால் என்ன?

What is peptic ulcer. Symptoms of peptic ulcer

வயிற்று புண் என்பது ஒரு வெளிப்படையான காயத்துடன் வலியுடைய‌ புண்ணாகும். வயிற்று புண்கள் முன்சிறுகுடலான‌, வயிறு அல்லது சிறு குடல் மேல் பகுதியில் உருவாகின்றன. வயிற்று புண் என்பது மிகவும் பொதுவான நோயாகும்.

வயிற்று புண் எவ்வாறு ஏற்படுகிறது?

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு, மன அழுத்தம், காரமான உணவு, மற்றும் மது அருந்துவதால் தான் வயிற்று புண்கள் ஏற்படுகின்றன‌ என்று மருத்துவர்களால் நம்பப்பட்டது. ஆனால் சில மருந்துகள் சாப்பிடுவதன் / அருந்துவதன் மூலமோ, அல்லது புகை பிடிப்பதன் மூலமோ அல்லது வயிறு மற்றும் மேல் குடல் பகுதியில் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்கள் தொற்றுவதன் மூலமோ வயிற்று புண்கள் ஏற்படுகின்றன‌ என்று நமக்கு இப்போது தெரியும்.

1982 ஆம் ஆண்டில், இரண்டு மருத்துவர்கள் - பேரி மார்ஷல் மற்றும் ராபின் வாரன் - மனித‌ வயிற்றில் வாழ்ந்து, வளரும் ஒரு குறிப்பிட்ட வகையான பாக்டீரியாக்களை கண்டுபிடித்தனர்.இரண்டு மருத்துவர்களும் தங்கள் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசினை வென்றன‌ர். அவர்கள் கண்டுபிடித்த‌ பாக்டீரியாவின் மருத்துவ பெயர் ஹெலிகோபாக்டர் பைலொரி (அல்லது ஹெச் பைலொரி, சுருக்கமாக) ஆகும். இன்று மருத்துவர்கள், பெரும்பான்மையான‌ வயிற்று புண்களுக்கு ஹெச் பைலொரி தொற்று தான் காராணம் என்று அறிவர்.

வயிற்று புண்ணால் பாதிக்கப்பட்ட‌ 90% பேர் ஹெச் பைலொரியால் தான் பாதிகப்படுகின்றனர் என மருத்துவர்களால் நம்பப்படுகின்றன‌. ஆனால் விநோதமாக, ஹெச் பைலொரியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு வயிற்று புண் உண்டாவதில்லை. மருத்துவர்களால் முற்றிலும் உறுதியாக சொல்லமுடிவதில்லை. ஆனால் அது தனிப்பட்ட நபர் சார்ந்தும் இருக்கலாம் என்றும் - உதாரணமாக, வயிற்று புண்ணால் பாதிக்கப்பட்ட நபரின் வயிற்று அகத்திரையில் (stomach lining) ஏற்கனவே பிரச்சனை இருந்திருக்கலாம் , ஆகையினால் வயிற்று புண் உருவாகிறது.

இயற்கையாகவே சிலருக்கு மற்றவர்களை விட வயிற்றில் அமிலம் அதிகமாக‌ சுரக்கின்றது , அவர்கள் உண்ணும் உணவு வகைகள், என்ன‌ மன‌அழுத்தத்திற்கு ஆட்படுத்திக்கொண்டாலும் அது காரணாம் ஆவதில்லை என‌ கருதப்படுகிறது. வயிற்று புண்கள் உண்டாவதற்கு ஹெச் பைலொரியின் தொற்று மற்றும் வயிற்றின் அமிலம் அளவும் காரணமாகலாம்.

நாள் : 11.11.2012 திருத்தம் : 07.05.2016

புதியவை / Recent Articles