தந்தூரி கோபி

சமையல்

Tandoori Gopi

தேவையான‌ பொருட்கள்

காலிஃப்ளவர் 1
வெங்காயம் 2
பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூண்
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூண்
கரம் மசாலாத் தூள் 1 டீஸ்பூண்
உப்பு தேவையான‌ அளவு
புளித்த‌ தயிர் 1/4 கப்
எண்ணெய் சிறிதளவு

எப்படி செய்வது

  1. காலிஃப்ளவரை பெரிய‌ துண்டுகளாக‌ ஒடிக்கவும்.

  2. வெந்நீரில் காலிஃப்ளவரை 2 நிமிடங்கள் முக்கி எடுக்கவும்.

  3. வெங்காயம், பூண்டு, தயிர், பொடிகள் ஆகியவற்றைக் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  4. பின்னர் கலவையை காலிஃப்ளவரில் பூசி, 10 நிமிடங்கள் ஊற‌ விடவும்.

  5. பின் சிறிது எண்ணெய் ஊற்றி பிசறி / பிசைந்து ஒரு தட்டில் பரத்தி வைத்துக்கொள்ளவும்.

  6. இப்போது இதனை வேக‌ வைக்க‌ பேக்கிங் ஓவனில் வைத்து 15 முத்ல் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

நாள் : 17.10.2013 திருத்தம் : 25.04.2014

புதியவை / Recent Articles