ரிலையன்ஸ் ஜியோ ! உலகின் மலிவான 4G நெட்வர்க் திட்டம் !!

Commerce

Reliance Jio 4G services with cheapest data rates in the world.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் (Reliance Communications), இந்தியாவின் மொபைல் நெட்வர்க் (Mobile Network) சேவையை மாற்றி அமைக்க உள்ளது. உலகில் வேறு எந்த நெட்வர்க் (Mobile Network) சேவை வழங்கும் நிறுவனங்களை விட‌,135 Mbps டேட்டா பரிமாற்ற வேகம் (transfer speeds of up to 135 Mbps), இலவச குரல் அழைப்புகள் (வாய்ஸ் காலிங் / Voice Calling) மற்றும் நாடு முழுவதும் ரோமிங் (free voice calls and roaming ) என்று, மற்றும் நாடு தழுவிய 4G LTE நெட்வொர்க் கூடிய‌ புதிய மொபைல் ஃபோன்களை குறைவான தரவு விகிதங்களில் (lower data rates) வழங்க‌ உள்ளது.

4ஜி மொபைல் சேவையினை குறைந்த‌ விலையில் வழங்கும் முக்கிய அம்சங்கள் கொண்ட‌ கைபேசிகளைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் இறுதிவரை, இலவச‌ அழைப்புகள், இலவச‌ இன்டர்நெட் சேவைக் கட்டணம் என‌ உலகிலேயே மிக மலிவு விலை சேவையான‌ ரிலையன்ஸ் இன் ஜியோ (Reliance Jio) சேவை இம்மாதம் முதல் தொடங்கவுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சேவையானது பிற‌ நெட்வொர்க்குகளை ஒப்பிடும்போதில் 10ல் ஒரு பங்கு குறைந்த கட்டணத்தில் இணையதள சேவையை வழங்க உள்ளது. ஜியோ சேவையில் ஒரு Mb டேட்டாவிற்கு வெறும் 5 பைசா மட்டுமே வசூலிக்கப்பட‌ உள்ளது. ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 50 மட்டுமே.

ரிலையன்ஸ் (Reliance ), தனது ஜியோ 4G-திறன் கொண்ட‌ கைபேசிகளை ரூ. 2,999 மற்றும் கம்பியில்லா திசைவி (wireless router) ரூ. 1,999 விலையில் வழங்குகிறது. மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் முக்கிய விடுமுறை நாட்களில் குறைந்த‌ கட்டண சேவைகள் என‌ பல‌ நன்மைகள் கொண்ட‌ சேவையை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் சிறப்பம்சங்கள்


மொபைல் அழைப்புகள் இலவசமாக‌ இந்தியா முழுவதும்.


ரோமிங் கட்டணம் ஏதும் இல்லை.


4ஜி கணெக்ஷன் 1 ஜிபி டேட்டா கட்டணம் வெறும் ரூ. 50 மட்டுமே.


மாணவர்களுக்கு இலவசமாக 25 சதவிதம் அதிக‌ பயன்பாடு.


முதல் 4 மாதங்களுக்கு இலவச நெட்வர்க் கணெக்ஷன்.


ரூ. 19 எனும் குறைவான‌ கட்டணத்தில் இருந்து மொபைல் திட்டங்கள்.


குறைந்த‌ அளவில் இன்டர்னெட் பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு ரூ. 149, அதிக அளவு உபயோகிப்போருக்கு ரூ. 4,999 வரை.


ரிலையன்ஸ் தயாரிப்பில் 'லைஃப்' பிராண்ட் மொபைல்கள் ரூ.2,999ல் இருந்து கிடைக்கும்.


நாள் : 31.08.2016 திருத்தம் : 02.09.2016

புதியவை / Recent Articles