மீண்டும் களமிறங்குகிறது நோக்கியா; 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் ( MWC 2017) இல் பங்கேற்பு

Nokia returns for smartphone business ; confirms participation in MWC 2017
Commerce

Nokia returns for smartphone business ; confirms participation in MWC 2017.

தரமிக்க‌ கைபேசி என்றால் அது நோக்கியா ஃபோண் (Nokia Mobile Phones - the Best) தான் என‌ சொல்லுமளவிற்கு உலகத்தரம் (World-class Quality) வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்த நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வணிகத்தினை (Smartphone business) மைக்ரோசாப்ட் நிறுவனம் சில‌ வருடங்களுக்கு முன்னர் ஒப்பந்த‌ அடிப்படையில் வாங்கிக்கொண்டது. இன்னிலையில் இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தமானது இவ்வருடத்துடன் முடிவுக்கு வருகின்றது..

இந்த ஆண்டு இறுதியில் திரும்பவும் மொபைல்போன் சந்தையில் நோக்கியா (Nokia returns to Mobile market) களமிறங்க‌ உள்ளது. இருப்பினும் 2016ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்மார்ட்போன்கள் (Nokia smartphones expected?) அல்லது டேப்லட்களை (Nokia Tablets) வெளியிடுவதாக‌ தெரியவில்லை.

இதனை அதிகார‌பூர்வமாக‌ டுவிட்டர் தளத்தில் டுவீட்டில் (Twitter Tweets) அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

எனினும், அறிக்கைகளின்படி நோக்கியா நிறுவனம் 2017 தொடக்கத்தில் புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை அறிமுகப்படுத்தும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது. 2017 பிப்ரவரியில் நிகழவிருக்கும் Mobile World Congress 2017 (MWC 2017) இல் புதுவித‌ வியக்கத்தக்க‌ கருவிகளை நோக்கியா அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹையா !!. 2017 ல் நோக்கியா போன்கள் நமது கையில் மீண்டும் பெருமை சேர்க்கப் போகின்றது.

நாள் : 19.10.2016 திருத்தம் : 19.10.2016

புதியவை / Recent Articles