இன்டெக்ஸ், 2017ல், நொய்டா ஆலையில் ஃபோன்களை உற்பத்தி செய்ய‌ உள்ளது

Intex-Showroom
Commerce

Intex adds a manufacturing unit in Noida for Smartphone manufacturing

ஸ்மார்ட்ஃபோன் ஹேண்ட்செட் உற்பத்தியாளர் இன்டெக்ஸ் (Handset manufacturer Intex), 2017ல் ஒரு புதிய உற்பத்தி அலகினை கிரேட்டர் நொய்டாவின் கஸ்னாவில்(Greater Noida's, Kasna) தொடங்க உள்ளது..

இந்த 850,000 சதுர அடி பரப்பளவு கொண்ட‌ உற்பத்தி ஆலயில், ஃபோன்கள், LED தொலைக்காட்சிகள் (LED TVs) மற்றும் மொபைல் பாகங்கள் (mobile accessories) தவிர‌ வாஷிங் மெஷின்களையும் (washing machines) தயாரிக்க‌ உள்ளது.

தற்போதுவரை, இன்டெக்ஸ் நொய்டாவில் மூன்று மற்றும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொன்று என‌ ஐந்து உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. இந்த அலகுகள் மல்டிமீடியா ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட்போன்கள், போன்கள், மொபைல் பேட்டரிகள், சார்ஜர்கள் மற்றும் LED தொலைக்காட்சிகளை உற்பத்தி செய்கின்றன‌. இன்டெக்ஸ் நிறுவனம் 2015 இல் அதன் நொய்டா ஆலைகளை அமைத்த‌ பிறகுதான் ஸ்மார்ட்போன்கள் (smartphone) உற்பத்தியினை தொடங்கியது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் தற்பொழுது, மாதம் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் போன்களை (2 million phones per month) உற்பத்தி செய்கின்றது. இன்டெக்ஸ் 9.2% சந்தை பங்கினைப் (market share) பெற்று சாம்சங் மற்றும் மைக்ரோமேக்சினைத் (Samsung and Micromax) தொடர்ந்து சந்தையில் மூன்றாவது நிலையை அடைந்துள்ளது..

நாள் : 20.10.2016 திருத்தம் : 20.10.2016

புதியவை / Recent Articles