ஜீயோனி இன் உற்பத்தி ஆலை இந்தியாவில் : பரிதாபாத்தில்

Mobile manufacturer company Gionee has signed a MoU with the Haryana Government to set up a manufacturing unit in Faridabad.

கைபேசி உற்பத்தி நிறுவனம் ஜீயோனி (Gionee), ரூ .500 கோடி முதலீட்டில் பரிதாபாத் நகரில் உற்பத்தி அலகினை அமைக்க அரியானா அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த‌ உற்பத்தி அலகு 50 ஏக்கர் பரப்பளவில் அமைய‌ உள்ளது மற்றும் அடுத்த 3 ஆண்டுகளில் 28,000 பேர் வேலை பெறவும் வழிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீயோனியின் புதிய‌ உற்பத்தி வசதி மூலம், மாதத்திற்கு சுமார் 6 லட்சம் மொபைல்களை உற்பத்தி செய்யும். வரும் கால‌த்தில் ஒரு ஏற்றுமதி மையமாகவும் (Export Hub) இந்த‌ பரிதாபாத் அலகு பயன்படுத்தப்படும்.

இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்ய, ஜீயோனி (Gionee), பாக்ஸ்கான் (Foxconn) மற்றும் டிக்சன் (Dixon) உடன் கடந்த ஆண்டு கூட்டமைத்துக்கொண்டது.

நாள் : 19.09.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles