டோமினோஸ், பீட்ஸ்ஸாவை ட்ரோன் விநியோகம் செய்ய‌ சோதனை செய்கிறது

Domino’s testing drone delivery program that drops pizza from the air

டோமினோஸ், பீட்ஸ்ஸாவை (Dominos Pizza) ட்ரோன் (ஆளில்லா சிறு விமானம், Drone) பயன்படுத்தி விநியோகம் செய்ய‌ சோதனை செய்து வருகிறது. ட்ரோன் மூலம் நுகர்வோர் பொருட்கள் வழங்கும் நிறுவனங்கள் பட்டியல் பெருகிக்கொண்டே வரும் நிலையில் டோமினோஸ் நிறுவனமும் பட்டியலில் இடம்பிடித்து நியூசிலாந்து நாட்டில் அதன் வணிகரீதியான‌ ட்ரோன் விநியோக சேவையைத் தொடங்கியது.

இந்த‌ ட்ரோன் விநியோக திட்டம் டோமினோஸ் மற்றும் ப்லிர்டி (Flirtey) இடையிலான கூட்டாண்மை மற்றும் அதை சோதனை சந்தைகளில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் துவங்க‌ உள்ளது.

அனைத்து பீஸ்ஸாவும் ட்ரோன் மூலம் வழங்கப்படுவதில்லை. டோமினோஸ் தனது வழக்கமான‌ கார் அல்லது ஸ்கூட்டர் வழியாக, விநியோகங்களுடன் சேர்த்து இந்த‌ ட்ரோன் சேவையை பரிசோதனை செய்ய‌வுள்ளது.

இந்த‌ சேவை வெற்றிபெற்றால், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி - என‌ ஆறு பிற சந்தைகளில் விரிவாக்கம் செய்யலாம்.

நாள் : 27.08.2016 திருத்தம் : 27.08.2016

புதியவை / Recent Articles