ஆன்டீவைரஸ் நிறுவனம் அவாஸ்ட் $ 1.3 பில்லியனுக்கு AVGஐ வாங்கவுள்ளது

Antivirus giant Avast is acquiring rival AVG for a cash deal

மாபெரும் ஆன்டீவைரஸ் நிறுவனமான‌ அவாஸ்ட் (Avast antivirus) $ 1.3 பில்லியனுக்கு போட்டியாளர் AVGஐ வாங்கவுள்ளது. உலகம் முழுவதும் 230 மில்லியன் பயனர்களைக்ள் கொண்டு நுகர்வோர் தர வைரஸ் தடுப்பு (customer-grade antivirus software) மென்பொருளுக்கென‌ அறியப்படும் மாபெரும் நிறுவனமான‌ அவாஸ்ட் ஒரு பண உடன்படிக்கை (cash deal) வழியாக‌ $ 1.3 பில்லியன் டாலருக்கு தனது போட்டியாளரான‌ AVG ஆன்டீவைரஸ் நிறுவனத்தினை வாங்க‌ உள்ளது என‌ அறிவித்துள்ளது.

இரண்டு நிறுவனங்களும் செக் குடியரசினை அடிப்படையாகக் கொண்டவையாகும். இந்த‌ ஒப்பந்தத்தின் மூலம் அவாஸ்ட் AVG உடன் இணைந்து உலகளவில் தனது வர்த்தக விரிவாக்கத்தினைச் செய்ய அனுமதிக்கும். இவ்விரு நிறுவனங்களும் மொபைல் பாதுகாப்பு பொருட்கள் (mobile security products) பயன்படுத்தும் 16 மில்லியன் மக்கள் உட்பட சுமார் 400 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளன‌ என்பது குறிப்பிடத்தக்கது.

அவாஸ்ட் இன் இந்த‌ புதிய கையகப்படுத்தல் (acquisition), சிறிய, நடுத்தர தொழில்களுக்கு மற்றும் IoT வன்பொருள் (IoT / Internet of Things hardware) போன்ற துறைகளில் சிறந்த பாதுகாப்பு சேவைகளை உருவாக்க அனுமதிக்கும் என்று நம்புகிறது.

Avast, antivirus software company with over 230 million users worldwide, has announced that it will acquire AVG for $1.3 billion in an all-cash deal. Both Avast and AVG software companies are based in the Czech Republic. The acquisition will allow Avast to expand its business across more markets worldwide. Two companies have a user base of about 400 million, including about 16 million people using mobile security products.

Source News
நாள் : 07.07.2016 திருத்தம் : 08.07.2016

புதியவை / Recent Articles