UPI) / The Unified Payments Interface
Gadgets

The Unified Payments Interface, UPI enabled-bank-apps let customers to transfer money across different banks with the use of a single identification and password.

நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் (NCPI) கைபேசி மூலம் சுலபமாக பண பரிவர்த்தனை செய்வதற்காக ‘யூனி­பைடு பேமன்ட்ஸ் இன்­டர்பேஸ் (UPI) / The Unified Payments Interface என்ற ஒருங்கிணைந்த கொடுப்பனவுகள் இடைமுகம் அறிவிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை தொடர்ந்து, யூனி­பைடு பேமன்ட்ஸ் இன்­டர்பேஸ் (UPI) கொண்ட‌ பயன்பாடுகள் (Banking Mobile App from respective banks) அறிமுகம் செய்வதற்கு 21 வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள‌து.

கூகிள் ஃபிளே ஸ்டோரில் (Google Play Store), யு.பி.ஐ செயல்படுத்தப்பட்ட மொபைல் பயன்பாட்டினைக் (UPI enabled-apps) கொண்ட வங்கிகளின் ப‌ட்டியல்:.

  1. Andhra Bank
  2. Axis Bank
  3. Bank of Maharashtra
  4. Bhartiya Mahila Bank
  5. Canara Bank
  6. Catholic Syrian Bank
  7. DCB Bank
  8. Federal Bank
  9. ICICI Bank
  10. TJSB Sahakari Bank
  11. Oriental Bank of Commerce
  12. Karnataka Bank
  13. UCO Bank
  14. Union Bank of India
  15. United Bank of India
  16. Punjab National Bank
  17. South Indian Bank
  18. Vijaya Bank
  19. YES Bank.

IDBI Bank மற்றும் RBL Bank வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு வங்கியின் பயன்பாட்டினை உபயோகிக்கலாம்.

யூனி­பைடு பேமன்ட்ஸ் இன்­டர்பேஸ் என்பது கொடுப்பனவுகளுக்கான‌ கட்டமைப்பு ஆகும். இதை பயன்படுத்தி பயனர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை வெளிப்படுத்தாமல் கடவுபெயர்களாக‌ (உதாரணம் : via aliases (such as ratheesh@axisbank)) பண‌ பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கும்

. ‘யூனி­பைடு பேமன்ட்ஸ் இன்­டர்பேஸ் (UBI)' ஆனது, ஒற்றை பயனர்பெயர், கடவுச்சொல்லை (password) பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் கைப்பேசி மூலம் பண பரிவர்த்தனை செய்ய வழிசெய்யும். இதன் மூலம், பல வங்கி கணக்குகளை வங்கிக்கான‌ ஒற்றை மொபைல் பயன்பாடு வழியாக‌ இணைக்க முடியும் மற்றும் சுலபமாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும் .

ஆதாரம் : NPCI news