bsnl-mobile-wallet-for-subscribers-with-mobikwik
Gadgets

BSNL introduces digital wallet for its subscribers, developed by MobiKwik for BSNL

10 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு பில் செலுத்துவதற்கு பயன்படுமான‌ மொபைல் பணப்பையினை (digital wallet) பாரத் சஞ்சார் நிகாம் (பிஎஸ்என்எல்) MobiKwik உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. இந்திய‌ அரசு நிறுவனமான‌ பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam (BSNL) இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று சிறந்த‌ சேவை புரிந்துவரும் முன்னணி நிறுவனமாகும். தற்போது பிஎஸ்என்எல் (மொபிவிக்) வால்ட் எனும் ஒரு புதிய சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த‌ மொபைல் ஆப் (Mobile app) பிஎஸெனெல் சந்தாதாரர்களுக்கு பில் கட்டணம் செலுத்த‌ பெரும் உதவி புரியும். பேடிஎம் வாலட் போன்று இதுவும் அனைத்து இடங்களிலும் ( மொபிவிக் வாலட்) பயன்படும் எனக் கூறப்படுகிறது

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பில் பணம் செலுத்துவதற்கு இனிமேல் மிக எளிமையாகப் பயன்படும் இந்த மொபிவிக் வாலட் ஆப், மேலும் பல்வேறு செயல் ஆற்றல்களைக் கொண்டுள்ளது.
இந்த வாலட் ஆப் பயன்படுத்தி ஆன்லைன் ரீசார்ஜ்கள், வேகமாக பில் (கட்டணம்) செலுத்துதல் போன்ற பலவகையான‌ சேவைகளுக்கு பயன்படும் வகையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது, புதிதாய் அறிமுகம் செய்யப்பட்ட‌ இந்த‌ வாலட் ஆப் 100மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்கள் தான் அதிக அளவில் விற்பனை ஆகின்றன‌. லெனோவா, ஆப்பிள் ஐபோன்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை அவற்றில் சேமிக்கும் பல தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது, மேலும் அவற்றின் செயல்முறையை குறித்து உடனடியாக விளக்கும் அளிக்குமாறு மத்திய அரசு 21 மொபைல் ஃபோன் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பிஎஸ்என்எல் இன் வாடிக்கையாளர்களுக்கு பில்கள் செலுத்துவதில் சந்தேகம் மற்றும் அவர்களின் தொலைபேசி இணைப்புகள் சம்பந்தமான‌ கேள்விகள், மறுசீரமைப்பு குறித்த‌ வினாக்கள், தினசரி கொள்முதல் செலுத்துவதற்காக வினாக்களுக்கும் பதில்தந்து உதவுகிறது" இந்த பிஎஸ்என்எல் வாலட் சேவைப் பயன்பாடு.