Mahindra & Mahindra launch DiGiSENSE
Automobiles

Mahindra & Mahindra has launched DiGiSENSE, an in-built vehicle tracker device

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, DiGiSENSE எனும் கருவியை இணைக்கப்பட்ட வாகன தொழில்நுட்ப தீர்வாக‌ அதன் சிறிய இரக‌ வர்த்தக வாகனங்களான‌ (commercial vehicles) ஜீற்றோ (Jeeto) மற்றும் இம்பீரியோ (Imperio ) வில் அறிமுகம் செய்துள்ளது. இந்த‌ வாகன‌ கண்காணிப்பு கருவி ரூ 5000 மற்றும் ரூ 6000 விலையில் குறிப்பிட்ட வாகன மாதிரிகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும்.

இத்தொழில்நுட்பம் படிப்படியாக‌ அனைத்து மஹிந்திரா வாகனங்களிலும் கிடைக்கபெறும், என்றாலும் இதுகுறித்த‌ கால வரையறையினை மஹிந்திரா நிறுவனம் குறிப்பிடவில்லை.

கடந்தமாதம் அறிவிக்கப்பட்ட‌ DiGiSENSE மேடையானது ஒரு திறந்தநிலை கட்டுமானமாகும் (open-architecture). திறந்தநிலை கட்டுமானமானதால் ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால் மஹிந்திரா DiGiSENSE நுட்பத்தினை பிற பயன்பாடுகளிலும் பயன்படுத்த ஒத்தியல்பை அனுமதிக்குமா (compatibility for use with other apps.) என்பதாகும்.

DiGiSENSE, நிகழ்நேர வாகன கண்காணிப்பு (realtime tracking), வாகன பயண தொகுப்பு (history of vehicle travel), தொலை இயந்திரம் கண்டறிதல், ஒரு சிறந்த‌ பாதையினை கண்டுபிடிக்க‌ உதவும் பாதை திட்டம் மற்றும் பழுதடைந்த வாகனங்களுக்காக‌ அருகில் உள்ள சேவை மையத்தை (service center) தொடர்பு கொள்வதற்கென்ற‌ ஒரு அவசர எச்சரிக்கை பொத்தானையும் கொண்டுள்ளது.

இதைத்தவிற‌, DiGiSENSE சேவையானது இடத்தின் முகவரி, எச்சரிக்கைகள், விநியோகங்கள் பூர்த்தி மற்றும் வாகனப் பயன்பாடு குறித்த‌ தகவல்க‌ளையும் வழங்குகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் (Android app) வழியாக கிடைக்கின்றன.DiGiSENSE பயனாளிகள், ஸ்மார்ட்போன் பயன்பாடு (ஆப்) இல்லாமலும் எஸ்எம்எஸ் மற்றும் வலைப்பக்கம் எச்சரிக்கைகளைப் பெற முடியும்.

மஹிந்திராவின் தடங்காணல் கருவி, உள்ளமைக்கப்பட்டது (in-built tracker) என்பதால் பயனர் எதையும் இன்ஸ்டால் செய்யும் தொல்லையிலிருந்து விடுபடுகின்றனர். இணைப்பு கட்டுப்பாட்டு அலகு (connectivity control unit /CCU) என‌ அழைக்கப்படும் கருவியானது, ஜிபிஎஸ் அலகு (GPS unit) மற்றும் ஒரு டேட்ட‌ பிளானைக் கொண்ட‌ சிம் அட்டையினையும் (SIM card with a data plan ) கொண்டிருக்கிறது. இந்த அலகு மஹிந்திரா செர்வர்களுடன் (Mahindra’s servers) இணைப்பினை ஏற்படுத்தி, நிலைகுறித்த‌ மற்றும் வாகனம் குறித்த‌ தரவுகளை 24x7 நேரமும் பதிவு செய்துகொள்ளும், பின்னர் இடைமுகம் (interface) வழியாக பயனாளர்களுக்கு கிடைக்கக்கூடியதாக தரவுகளை உருவாக்குகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.