வோக்ஸ்வாகன் அதன் ஈ.வி பேட்டரிகளை எப்படி மறுசுழற்சி செய்கிறது ?
பேட்டரியில் ஓடும் மின்சார வாகனங்களுக்கான மாற்றம் ஆரம்பமாகிவிட்டாலும், லித்தியம் அயன் பேட்டரிகளில் (lithium-ion batteries) உள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கூறுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் நன்கு அறிவோம்.
ஈ.வி. பேட்டரிக்களின் (EV battery) முழு சார்ஜ்களையும் உபயோகப்படுத்திய பின் இனி பயன்படுத்த முடியாது என்கின்றபோது இந்த பொருட்களை மீட்டெடுத்து மொத்த கழிவுகளை மறுசுழற்சி செய்வது என்பது தீவிரமான செயல்முறையாகக் கூடும்.
ஜெர்மன் வாகன உற்பத்தியாளர் வோக்ஸ்வாகன் (Volkswagen) ஏற்கனவே சால்ஸ்கிட்டரில் (Salzgitte) ஒரு பேட்டரி மறுசுழற்சி ஆலையை உருவாக்கியுள்ளது. சமீபத்திய வீடியோவில் (இடது / மேலே) பேட்டரியை மறுசுழற்சி செய்வதற்கான பொதுவான செயல்முறையைக் காட்டுகிறது.
ஜெர்மனியின் சாலைகளில் பயன்படுத்த 588,000 க்கும் மேற்பட்ட EV கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க பேட்டரி மறுசுழற்சி தேவை இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் EV க்களை பயன்படுத்தும் உலக நாடுகள் அனைத்தும் அதன் ஈ.வி பேட்டரி மறுசுழற்சி ஆலைகளை வேகமாக விரிவாக்கம் செய்யக்கூடும்.
வோக்ஸ்வாகன் (Volkswagen) கூற்றுப்படி, ஒரு ஈ.வி பேக்கில் 95% பொருட்களை மீட்டெடுக்க முடியும் என்றும் எதிர்கால பேட்டரி பொதிகளில் இவை மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்றும், இதனால் கழிவுகளை குறைக்கலாம்.எலக்ட்ரிக் கார்கள் குறித்த அறிக்கையின்படி, வழக்கமான மறுசுழற்சி முறைகள் மூலம் 60% பேட்டரி பொருட்களை மட்டுமே மீட்டெடுக்க முடியும். எனவே வோக்ஸ்வாகன் (Volkswagen) இன் புதிய செயல்முறை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது.
தற்போது, வோக்ஸ்வாகன் (Volkswagen) இன் சால்ஸ்கிட்டர் ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 3,600 பேட்டரி பேக்களை (battery packs) மறுசுழற்சி செய்யலாம். இது ஒரு நல்ல தொடக்கமாகும், ஆனால் 2040 ஆம் ஆண்டில் 7 மில்லியன் டன்களுக்கும் அதிகமான ஈ.வி பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய நேரிடும் என்று ஆய்வுகள் கணித்துள்ளன. சராசரி ஈ.வி பேட்டரியின் எடை சுமார் 500 கிலோ இருக்கும்.