கியா EV6 ஐ வெளியிடுகிறது, 2021 ஆம் ஆண்டின் டக்கரான EV இதுவா !!
கியா (Kia) அதன் வரவிருக்கும் மின்சார வாகனத்தின் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. ஆக்கப்பூர்வமாக EV6 என இந்த எலக்ட்ரிக் கார் பெயரிடப்பட்டது. டீஸர் புகைப்படங்கள் அதிக தகவலை சொல்லவில்லை என்றாலும், கியா சில புதிய புகைப்படங்களை வெளியிட்டதால், காரைப் பற்றிய சிறப்பான அம்சங்கள் வெளியாகியுள்ளன.
கியா ஒரு தென் கொரிய கார் தயாரிப்பு (Korean carmaker company) நிறுவனமாகும், இது பல முக்கிய நாடுகளில் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்கிறது. ஆரம்ப கட்டத்தில், கியா 1944 ஆம் ஆண்டில் எஃகு குழாய்கள் மற்றும் சைக்கிள் பாகங்கள் மட்டுமே தயாரிப்பதன் மூலம் தங்கள் பயணத்தைத் தொடங்கியது. என்றாலும் கார் உற்பத்தியில் அப்போது ஈடுபடவில்லை. பின்னர் 1962 ஆம் ஆண்டில், மஸ்டா-உரிமம் பெற்ற லாரிகளை (Mazda-licensed trucks) உற்பத்தி செய்து விற்பனை செய்யத் தொடங்கியது, பின்னர் 1974 ஆம் ஆண்டில் கியா கார்களைத் தயாரிக்கத் தொடங்கியது.
கியா அதன் முதல் அர்ப்பணிப்பாக ஈ.வி 6 ஐ (Kia EV6) மாதிரியை உருவாக்கியுள்ளது. இது இ-ஜி.எம்.பி ( E-GMP platform) இயங்குதளத்தில் கட்டப்பட்டுள்ளது. இ-ஜி.எம்.பி ( E-GMP platform) மின்சார வாகனங்களுக்கு மட்டுமே என உருவமைக்கப்பட்ட பிளாட்பார்ம் ஆகும். கியா நிரோ ஈ.வி.யை விற்கின்றது என்றாலும் இது பெட்ரோல் வகைகளுடன் பகிரப்பட்ட ஒரு மேடையில் கட்டப்பட்டுள்ள கார்கள் ஆகும்.
E-GMP இயங்குதளத்தில் கட்டப்பட்டிருப்பதால், EV6 ஐயோனிக் 5 (Ioniq 5) உடன் பல ஒற்றுமைகளைக் கொண்டு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மிகச்சிறந்த EV களில் ஒன்றாகும். பெரும்பாலான கியா கார்களைப் போலவே, EV6 பார்பதற்கு அழகாக இருக்கிறது.
எல்லா கியா கார்களைப் போலவே, குறைவான விலை, அதிகப்படியான தரமான உபகரணங்கள் என விற்பனை செய்யப்படுவதால், கியா EV6 கார் ஒன்றை வாங்குவதற்காக அனைவரும் விரும்புவார்கள் என்பதே உண்மை.