apple-iphone-usb-c-cable
Gadgets

Apple has dropped the price of its USB-C to Lightning cable by $6.The new price $19 equals Lightning cable rate.

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும், கணினிகளுடன் இணைப்பதற்காக அறிமுகம் செய்த USB-C வகை கேபிளின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. USB-C கேபிள் பயன்படுத்தி ஆப்பிளின் ஐஃபோன் மொபைல் ஃபோன்களை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டபோது, ஒரு மீட்டர் யுஎஸ்பி-சி கேபிள் (Lightning-to-USB-C) $ 25 க்கு வெளியான போது அது மிகப்பெரிய விலையாக இருந்தது. ஆப்பிள் ஐஃபோன் பிரியர்களிடயே ( iPhone fans) USB-C கேபிளின் அதிக விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது, $ 19 டாலராக (அல்லது £ 19 அல்லது AU $ 29) குறைத்து மற்ற கேபிள்கள் (Lightning-to-USB-A cable) விலையில் வழங்க உள்ளது.

தற்போது 6 டாலர்கள் குறைக்கப்பட்டு 19 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய வகை USB-A கேபிள் உற்பத்தியினை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம் USB-C வகை கேபிளினை இனிமுதல் விற்பனைக்கென வரும் புது ஐபோன்கள் பெட்டியில் சேர்த்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது..

விலை வீழ்ச்சியால் Lightning-to-USB-C கேபிள் இப்போது standard Lightning-to-USB-A cable விலைக்குச் சமமாக கிடைக்கின்றது.