ஆப்பிள் கார்ட் ஆகஸ்டில் வருகிறது : ஆப்பிள் உறுதி
வங்கிகள் வழங்கும் கிரடிட் கார்ட்களைப் போல தனது கார்ட்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இந்த கார்ட் (Apple Card) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களை தவணைக் கொடுப்பனவு முறையில் எளிதாக வாங்க முடியும்.
ஆப்பிள் கார்டு டிஜிட்டல் (digital) கொடுப்பனவாகவும் மற்றும் உருவமைக்கப்பட்ட டைட்டானியம் அட்டை வடிவத்திலும் கிடைக்கப்படும். மேலும், ஆப்பிள் கார்டு ஆனது வழக்கமான கிரெடிட் கார்டுகளின் 16 இலக்க அட்டை எண், சி.வி.வி குறியீடு அல்லது காலாவதி தேதியை போன்ற தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தாது. அதற்கு பதிலாக, ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் சீரற்ற எண்களை உருவாக்கும் (generate numbers randomly during each transaction). இது கொள்முதல் பரிவர்தனை பாதுகாப்பாக இருக்க உதவும்.
அத்துடன் வங்கிகளில் வழங்கப்படும் கிரடிட் கார்ட்களை விட குறைந்த வட்டி வீதம் உட்பட மேலும் பல சலுகைகளை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இக் கார்ட்டினை பெற விரும்புவர்கள் ஆப்பிள் வால்லட் ஆப் (Apple Wallet App) மூலம் விண்ணப்பிக்க முடியும்.
எது எப்படியாக இருந்தாலும் ஆப்பிள் கார்ட் ஆனது அமெரிக்காவில் தான் முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் எனத் தெரியவருகிறது.