திருக்குறள்

Thiruvalluvar

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன‌. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக‌ 133 அதிகாரங்கள் உள்ள‌ன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

கண்விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. 1171 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது...

படர்மெலிந்திரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். 1161 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு...

பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. 1151 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண்...

அலரறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். 1141 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ்...

நாணுத்துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. 1131 நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து....

காதற்சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். 1121 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122...

நலம்புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். 1111 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும்...

புணர்ச்சிமகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. 1101 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத்...

குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து 1091 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்...

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. 1081 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு...

கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். 1071 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். 1072...

இரவச்சம்

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். 1061 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி...

இரவு

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. 1051 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்....

நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. 1041 இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்....

உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. 1031 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம்...