டக்கரான ஜாக்குவார் (Jaguar) கார்கள் எதிர்காலத்தில் எப்படியிருக்கும்?
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் (Jaguar and Land Rover model Cars) 2020 ஆம் ஆண்டு முதல், வெளியாகும் அனைத்து புதிய வாகனங்களும் முழுமையாக மின் ஆக்கம் அல்லது ஹைபிரிட் விருப்பத்தை கொண்டிருக்கும் என அறிவித்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில், மிகவும் கடுமையான உமிழ்வு ஒழுங்குமுறைகள் (stringent emissions regulations) கார் நிறுவன சந்தைகளில் முக்கிய பங்கு வகிக்கும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியமானது 2021 ஆம் ஆண்டில் அதன் அனைத்து புதிய கார்களிலும் 40% CO2 உமிழ்வுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்மார்றம் செய்து வருகின்றன.
இதற்கிடையில், பல்வேறு பெரிய கார் உற்பத்தியாளர்களின் கவனமும் டெஸ்லாவின் மின்சார வகை கார்களின் பக்கமாக சாய்ந்து அவ்வகைக் கார்களை உற்பத்தி செய்ய தூண்டுகின்றது. ஜூலையில், வோல்வோ நிறுவனம் அதன் அனைத்து வாகனங்களையும் 2019 வாக்கில் மின் மயமாக்க உறுதி பூண்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில், ஆஸ்ட்ரோன் மார்டின் 2025 ஆம் ஆண்டில் முற்றிலும் கலப்பினமாக்கப் போகின்றது என்று அறிவித்தது.
இவ்வரிசையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் (Jaguar Land Rover, JLR) நிறுவனம், 2040 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எதிர்கால தொழில்நுட்ப அடிப்படையில் தனது சொந்த இரக கார்கள் எவ்வாறு இருக்கக் கூடும் எனும் கமெர்சியல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இவ்வீடியோவைப் கீழே பாருங்கள்.